இம்முறை முதலாம் தரத்துக்கு வகுப்போன்றிற்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவர்
கல்வியமைச்சின் செயலாளர், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பியுள்ள விஷேட சுற்றிக்கையின் 2016ஆம் ஆண்டு தொடக்கம் முதலாம் தரத்தில் வகுப்பொன்றுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருக்கவேண்டு என இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தினால் கல்வியமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட அறிவித்தலின்படி முதலாம் தரத்தில் வகுப்பொன்றுக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, 35ஆக முன்னதாக உத்தரவிட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு மட்டும் 40 என்ற எண்ணிக்கை இருக்கவேண்டுமென்றும் அதற்குப்பின்னர், ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு மாணவர் என்ற வீதம் குறைத்து, 2021ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆகக் குறைக்க வேண்டும் எனவும் அச்சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


