கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தின் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது .
கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் ஒளிவிழா நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரன்ஸ் செல்லர் தலைமையில் நேற்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக பறங்கியர் சங்க உறுபினர்களின் சிறுவர்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை மலர் செண்டு வழங்கி அழைத்து வரப்பட்டனர் .
அதனை தொடர்ந்து இறைவணக்கத்துடன் கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு கல்லடி 231வது பாதுகாப்பு பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினல் கேணல் ரோஹான் ராஜபக்ச , மேஜர் அனுர துனதிலக , கேணல் சம்பத் லியனகே , முன்னால் கிழக்குமாகாண பறங்கியர் சங்க தலைவர் சனி ஒக்கஸ் மற்றும் ஒளிவிழா நிகழ்வுக்கு வருகை தந்த கிழக்கு மாகாண பறங்கியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பறங்கியர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளும் , கலாச்சார மொழியிலான பாடல்களும் இடம்பெற்றதுடன் , பாடசாலை மாணவர்களில் ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் மற்றும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பசில்களும் , கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு பறங்கியர் சங்க உறுப்பினர்களின் விதவை பெண்களுக்கான வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகளும் வழங்கிவைக்கப்பட்டது













