Breaking News

"கிரில்"லைத் தாண்டி வந்து தாக்கிய பந்து...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் அன்வர் அலி வீசிய பந்து படு வேகமாக வந்து ஹெல்மெட்டின் கம்பிகளையும் தாண்டி ஊடுறுவி கண்ணில் பட்டதால் நியூசிலாந்து வீரர் மிட்சல் மெக்ளெனகனின் கண்ணில் காயம் ஏற்பட்டு விட்டது. 

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. இன்று வெலிங்டன் நகரில் முதல் ஒரு நாள் போட்டி நடந்தது.

அன்வர் அலி வீசிய பந்து வேகமாக வந்து மிட்சலின் முகத்தைத் தாக்கியது. அவரது ஹெல்மெட் கம்பிகளையும் ஊடுறுவி உள்ளே புகுந்த கண்ணைத் தாக்கி விட்டது.