Breaking News

தனியாக பயணம் செய்து அண்டார்டிகாவை கடக்க முயன்ற இங்கிலாந்து சாகச மரணம் !

லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.

இவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.

அதற்காக கடந்த 71 நாட்களுக்கு முன்பு தென் துருவம் வழியாக அண்டார்டிகாவை கடக்க தன்னந்தனியாக பயணத்தை தொடர்ந்தார். அவரது கடினமான பயணம் சுமூகமாக சென்றது.

ஆனால் வெற்றி இலக்கை அடைய 48 கிலோ மீட்டர் அதாவது 30 மைல் தூரம் இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. உடனே இவர் தன்னை காப்பாற்றும்படி உதவி கேட்டார்.

உடனே, ஹெலிகாப்டார் மூலம் அவர் மீட்கப்பட்டு சிலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். உடல் சோர்வு மற்றும் உடலில் இருந்து நீர்வெளியேற்றம் போன்ற காரணங்களால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

ஹென்ரி இறந்த தகவலை அவரது மனைவி ஜோயன்னா தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்