கர்ப்ப காலத்தில் காரசாரமாக உண்பது சரியா?
கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் பெண்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். எண்ணெய், காரம், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
காரசாரமான உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது என்று எந்த டாக்டரும் சொல்வதில்லை. இப்படிச் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரும் என்பதால் பெரியவர்கள் இப்படி சொல்வார்கள். அந்த பிரச்சினைகள் வராமல் இருப்பின் தாராளமாய் சாப்பிடலாம்.
இந்த உணவுப் பொருட்களில் வாசனைக்காக
சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களான மிளகு, சீரகம், சோம்பு போன்ற வாசனைப் பொருட்களில் விட்டமின் சி அதிகளவில்
இருப்பதால் ஒரு வகையில் ஆரோக்கியமானதே. ஆனால் அதிக காரமும் எண்ணெயும் அசிடிட்டி ஏற்படுத்தும் என்பதால் கூடுமான
அளவிற்கு எண்ணெய் மற்றும் காரத்தைக் குறைப்பது உத்தமம்.



