Breaking News

மாவட்ட கூட்டுறவு சபை இரண்டாம் தர சங்கங்களினது அறிவூட்டல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபையும் , கூட்டுறவுத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் பலநோக்கு , இரண்டாம் தர சங்கங்களினது தலைவர், இயக்குனர், பொதுமுகாமையாளர் ஆகியோர்களுக்கான  வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பலவீனங்களை இனங்கண்டு சங்கங்களை பலப்படுத்தல் எனும் தலைப்பில் அறிவூட்டல் செயலமர்வு  மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் ஆர் .ராயப்பு தலைமையில்  இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் கிழக்குமாகான விவசாய ,நீர்ப்பாசன ,கால்நடை ,மீன்பிடி ,கூட்டுறவு உணவு வழங்கல் அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,அமைச்சின் செயலாளர்  கே . சிவநாதன் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஞா .ஸ்ரீநேசன் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழுவின் பிரதி தலைவரும் .பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அமீர் அலி , 

பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .யோகேஸ்வரன்,  கிழக்குமாகான கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்  திருமதி .கே . ராஜனி , மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்  எஸ் . கிருபைராசசிங்கம் ,கிழக்கு மாகான கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் .திவாகா சர்மா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்  ..

இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை முகாமையாளர்களினால் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்