கிழக்கில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம்
25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500 க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கிழக்கின் முதலீடு 2016 மாநாட்டிற்கு பங்கு கொண்டனர் .
கிழக்கில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க கூடிய சாத்தியகூறு இக்கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 மூலம் ஏற்பட்டுள்ளது .
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.



