மாதிரி கிராம அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வும் ,உழவர் திருநாள் பொங்கல் விழா சிறப்பு நிகழ்வும் - படங்கள்
2016 வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டங்கள் நாடளாவியல் ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
இதன் ஒரு திட்டம் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக இணைந்து விசேட மாதிரி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை திராய்மடு கிராமசேவை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் மாதிரி கிராம அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வும் ,உழவர் திருநாள் பொங்கல் விழா சிறப்பு நிகழ்வும் இன்று திராய்மடு கொலனி கிராம சேவை பிரிவில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அவர்களுக்கான வீடமைப்பு ,வீதி அபிவிருத்தி , குடிநீர் வழங்கல் போன்ற சகல வேலைத்திட்டங்களை மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தியை செய்வதற்கான மாதிரி கிராம அபிவிருத்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
அதன் ஒரு திட்டமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திராய்மடு கொலனி கிராமம் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார் .
இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராமங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் , மதுபோதைக்கு அடிமையாகின்றமை, இதனால் ஏற்படுகின்ற குடும்ப வறுமை போன்ற நிலைமை மாற்றுவதற்கான திட்டங்களை கிராம மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தியினை நடைமுறை படுத்துவதாகவும் இதன் போது தெரிவித்தார் .
இந்நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே . நிர்மளா. மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரி சங்க தலைவர் எஸ் .தில்லைநாதன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் . எஸ் . விஜெகுமார் ,இருதயபுரம் வங்கி முகாமையாளர் திருமதி .கே .சுவந்தினி , இருதயபுரம் வலய உதவியாளர் .டி .பிரபாகரன் , வலய திவிநெகும உத்தியோகத்தர் இ .காண்டீபன், கிராம சேவை உத்தியோகத்தர் எ .நேசராசா மற்றும் திராய்மடு கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,சமுர்த்தி சங்கங்களில் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்,



