காணாமல் போனவர்கள் விவகாரம் குறித்து சரியான முறையில் தரவுகள் திரட்டப்படவில்லை அமெரிக்கா, வலியுறுத்தல்
இலங்கையில் இதுவரையில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதூப்புப் பேரவையில் வலியுறுத்தியுள்ளது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவார் இது விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் மற்றும் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
காணமல் போதல்கள் தங்களது வாழக்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை காணாமல் போனவர்களின் உறவினர்கள் வெளிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் உரிய முறையில் திரட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



