சமஷ்டிமுறையில் உரிமையைத் தந்தால் தமிழர்கள் ஒன்றும் பிரிந்து போகமாட்டார்கள் !
சமஷ்டி முறையாட்சியின் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் வழங்கப்பட்டால் சேர்ந்துவாழமுடியும் என வட மகாணா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். மேலும் உலகில் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ள நாடுகளில் வாழும் மக்கள் பிரிந்து போகவில்லை என்றும், சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்பது பிரிவினை என்ற கருத்தினை விதைத்துள்ளதாகவும் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் தெரிவித்துள்ளார்.