உலக தாய்மொழி தின நிகழ்வுகள்
(என்டன்)
உலக தாய்மொழி தின நிகழ்வுகள் நாளை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது .
.
உலக தாய்மொழி தினம் நிகழ்வின் போது தெலுங்கர் ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் ஆற்றுகை காட்சிப்படுத்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு பட்ட கலாசார நிகழ்வுகள் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை இடம்பெறவுள்ளன .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாகரை அம்மந்தனாவெளி களுவங்கேணி வேடர் சமூகத்தினர் , அளிகம்பை தெலுங்கர் மற்றும் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினர் பங்கெடுக்க உள்ளனர் .
நிகழ்வுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு நேற்று மாலை கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் நிறுவகத்தில் இடம்பெற்றது,
இந்த சந்திப்பு நிகழ்வில் போது நிகழ்வின் இணைப்பாளர் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் திருமதி . உமா ஸ்ரீசங்கர் , நிருவாக மாணவர்கள் , ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .