உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது .
(லியோ )
ஆண்டு தோறும் உலக தாய்மொழி தினமானது பெப்பரவரி 21ஆம் திகதி அன்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றது .
ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.
உலகளாவிய ரீதியாக பேசப்படும் மொழிகள் பொதுமொழி ,தாய்மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது . உலகிலுள்ள மொழிகளுள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ளவும் வருடம் தோறும் 21ஆம் திகதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
இதனை நினைவு கூறும் முகமாக உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது .
.
உலக தாய்மொழி தினம் நிகழ்வில் தெலுங்கர் ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் ஆற்றுகை காட்சிப்படுத்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு கலாசார நிகழ்வுகள் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் நிறுவகத்தில் இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாகரை அம்மந்தனாவெளி களுவங்கேணி வேடர் சமூகத்தினர் , அளிகம்பை தெலுங்கர் மற்றும் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினர் பங்களிப்பு செய்தனர் .
உலக தாய்மொழி தினம் நிகழ்வினை நினைவு கூறும் முகமாக தெலுங்கர் ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி க .ஜெயசிங்கம் ,கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் உமா குமாரசுவாமி , அருட்தந்தை ஜோசெப் மேரி மற்றும் இந்நிகழ்வில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் கலந்துகொண்டனர் .