Breaking News

ஹோட்டல் முகாமைத்துவ ஆரம்ப பயிற்சியினை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.

ஒரு மாத கால ஹோட்டல் முகாமைத்துவ ஆரம்ப பயிற்சியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்களை இன்று 24.02.2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வழங்கி வைத்தார் . 

இப்பயிற்சி  நெறியானது சுற்றுலா  அபிவிருத்தி அமைச்சுடன்  கிழக்கு மாகாண  முதலமைச்சின்  சுற்றுலாத்துறை  திணைக்களமும்  இணைந்து கிழக்கு மாகாண  இளைஞர்களின்  தொழில் முயற்சியினை  ஊக்கப்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டதிற்கான தீர்வினை  பெற்றுக் கொடுக்க முதலமைச்சரினால் முன்னெடுத்து வரும்  பாரிய  வேலைத்திட்டத்தில் ஒரு கட்டமாக  இவ்விளைஞர்களுக்குரிய பயிற்சி  நெறி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .