அமெரிக்காவில் நடுரோட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் !
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மீது ஒரு சிறிய ரக விமானம் பறந்து சென்றது. பகோய்மா பகுதியில் பரபரப்பான ரோட்டின் மீது பறந்த போது விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் நிலை தடுமாறிய அந்த விமானம் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் விசேஷம் என்னவென்றால் இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. நொறுங்கி விழுந்த விமானத்தின் விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சிலர் இந்த விபத்தில் சிக்கியும் காயமின்றி தப்பினார்கள். ஆனால் வாகனங்கள் சேதம் அடைந்தன.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகளும் அதிவிரைவு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.