Breaking News

இலங்கைக்கு கடந்த வருடங்களை விட அதிக நிதியுதவி

எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையின் அபிவிருத்திக்காக கடந்த வருடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை விட,  அதிக உதவிகளை வழங்க எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Takehiko Nakao தெரிவித்துள்ளார். இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கபடுகின்றது.