பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் நோக்குடனான கலந்துரையாடல்
(லியோ )
சமூக மட்டத்தில் இடம்பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் நோக்குடனான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை பிரிவுகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் நோக்குடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்ரவாணி மனோகரன் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது .
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான எதிரான வன்முறைகளை அதிகரித்து வருகின்ற வேளையில் அதனை கண்டிக்கும் வகையிளும் அதேவேளை நல்லதொரு சமூகத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் தேவைகள் நாடும் பெண்கள் அமைப்பினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துக்கள் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன . .
இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் , கிராம சேவை உத்தியோகத்தர் , அரச , அரச சார்பற்ற பிரதிநிதிகள் தேவைகள் நாடும் மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்