தந்தை கமலுடன் நடிப்பது மிகப்பெரிய கௌரவம்- சுருதிஹாசன்
தந்தை கமலுடன் பணியாற்றுவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். நடிக்க வந்து 7 வருடங்களுக்குப்பின் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நடிகை சுருதிக்கு கிடைத்திருக்கிறது. நிஜத்தைப் போலவே படத்திலும் தந்தை - மகளாக இருவரும் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தந்தையுடன் நடிக்கப் போவது குறித்து நடிகை சுருதிஹாசன் "நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் தந்தை கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக காத்திருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் மிகப்பெரிய கௌரவம் கருதுகிறேன். அப்பாவுடன் இணைந்து நடிப்பது சவாலான விஷயம் தான் ஆனால் கடுமையாக உழைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை, மற்ற விஷயங்கள் கடவுள் மற்றும் ரசிகர்களின் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.