போர்க்குற்ற விசாரணைகளின்போது வெளிநாட்டவர்கள் பங்கேற்க அனுமதி !
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வொசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தில் நேற்று ஆற்றிய உரையின்போது தெரிவித்துள்ளார்.



