Breaking News

இதுவரை யாரையும் லவ் பண்ணலை...

இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மேலும் தமன்னா-சாஜித் கான் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் இந்தக் காதல் விவகாரங்கள் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் கூறும்போது "டைரக்டர் சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ஹிம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன். அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம்.

படப்பிடிப்பில் சாஜித் கான் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும், கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை.