Breaking News

இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தினால்,குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகள் ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை இலங்கை சிறைச்சாலை ஐக்கிய ஒன்றியத்தினால், குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகள் ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நாடளாவியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது  சிறைச்சாலை இருக்கின்ற கைதிகள் . சிறைச்சாலைகளில்  இருந்து விடுதலையானவர்கள், பாடசாலை மாணவர்கள் ,சமூக மத்தியில்  மற்றும் குடும்ப சூழலில் வாழபவர்கள் விடயத்தில் கவணம் செலுத்தி மாணவர்களின் கல்வியிலும்  சமூக மத்தியில் வாழபவர்கள் சிறைகளுக்கு  செல்வதனை தடுப்பதற்கான  ஆலோசனைகளும் வழங்கி வருகிறது .


இந்த  விழிப்புணர்வு  கருத்தரங்குகளை   இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மட்டத்தில்  நடைமுறை படுத்தி வருகின்றனர் .

இதன் ஒரு விழிப்புணர்வு  நிகழ்வு இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு கருவப்பங்கேணி   விபுலானந்த கல்லூரியில்  அதிபரின் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தின் மட்டக்களப்பு ,அம்பாறை பிராந்திய தேசிய இயக்குனர் ஜெயராஜ் , தலைவர் . தயாசீலன் , சிறைச்சாலை ஐக்கிய  குழுவின் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .