Breaking News

இன்று கூட்டமைப்பை சந்திக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று(சனிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பானது இன்று பகல்  12 மணியளவில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விஜயத்தின்போது சுஸ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்றைய தினம்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இவர் இன்று காலை ஜனாதிபதியையும், அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் சந்திக்கவுள்ளார்.

இதன்பின்னர் கூட்டமைப்பைச் சந்திக்கவிருக்கும் இவர், முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, மற்றும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.