இலங்கயில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளது !
இலங்கையில் பிற நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன் படி NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை அனுப்புவதற்கு முன்கூட்டிய அனுமதி பெறப்படத்தெவையில்லை என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிக் கணக்குகளில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு சமனான தொகையை மீளப்பெறுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.



