Breaking News

தொடர்ச்சியாக 3 Man of the Match கலக்கும் ஆரோன் பின்ச்!

நடப்பு ஐபிஎல் தொடர், குஜராத் லயன்ஸுக்கான தொடராக இருக்குமோ என்று எண்ணும் வகையில் அந்த அணி அட்டகாசமாக ஆடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் தான் ஆடிய 3 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். 

டி20 நிபுணரான பின்ச், நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களைக் குவித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார். இது இந்தத் தொடரில் அவர் போடும் 3வது அரை சதமாகும். அதாவது இந்தத் தொடரில் அவர் விளையாடிய 3 போட்டிகளிலுமே அரை சதம் அடித்துள்ளார்.