36 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறைத் திணைக்களத்தின் தலைவராக தமிழர் ஒருவர்
இலங்கையில் 36 வருடங்களுக்குப்பின்னர், தமிழ் அரசியல்வாதி ஒருவர் காவல்துறைத் திணைக்களத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப் பட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்ததையோட்டியே, காவல்துறை திணைக்களம், அமைச்சர் சுவாமிநாதனின் தற்காலிக கட்டுப்பாட்டில் உள்ளது.
முனைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பதவிகாலத்தில், 14.02.1980ஆம் ஆண்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சராக, கே.டபிள்யூ தேவநாயகத்தை நியமித்திருந்தார். அக்காலபகுதியில்
காவல்துறை திணைக்களமானது, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.