Breaking News

அமிர்தகழி இளைஞர் கழகத்தினால் நடத்தப்பட்ட சித்திரை புதுவருட கலை ,கலாசார விளையாட்டு நிகழ்வுகள்

(என்டன்)

சித்திரை  புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி இளைஞர்  கழகத்தினால் நடத்தப்பட்ட  சித்திரை  புதுவருட  கலை ,கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   மட்டக்களப்பு - அமிர்தகழி   கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை  இடம்பெற்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவை பிரிவின் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தமிழ் சிங்கள  சித்திரை புதுவருட பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்   நேற்று மாலை  மட்டக்களப்பு  அமிர்தகழி    கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை  மிக சிறப்பாக   இடம்பெற்றது .

இடம்பெற்ற சித்திரை புதுவருட கலை ,கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய  கலாசார விளையாட்டு நிகழ்வாக  ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , வலுக்கு மரம் ஏறுதல் ,  தேசிக்காய் கரண்டி ஓட்டம்  என சிறுவர்கள்  மற்றும் பெரியவர்களுக்கான பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு  அமிர்தகழி கிராம பொதுமக்கள்  ,பாடசாலை  சிறுவர்கள் என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் . உதயகுமார் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எச் .கே .டி .ஹெட்டிஹாரச்சி , அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி எஸ் . தர்ஷினி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . வனஜா ,மண்முனை  வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி .பி . பிரசாந்தினி  மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி . அருள்மொழி , அமிர்தகழி கிராம அபிவிருத்தி குழு தலைவர் மருதலிங்கம் மற்றும் அமிர்தகழி இளைஞர்  கழக உறுப்பினர்கள் , அமிர்தகழி கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் .