Breaking News

லண்டன் விமான நிலையத்தில் 14 லிட்டர் தாய்ப்பாலை கொட்டியளிக்கும்படி நிர்பந்திக்கப்பட்ட தாய்

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஜெசிகா கோக்லி மார்டினெஷ் 2 குழந்தைகளின் தாயான இவருக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில்  இவர் லண்டன் ஹீத்ருவில் இருந்து விமான பயணம் மேற்கொள்ள காத்திருந்தார். தன்னுடன் 14.8 லிட்டர் தாய்ப்பால் எடுத்து வந்தார். குழந்தை இன்றி தனியாக வந்திருந்தார்.

அவரை பரிசோதித்த நிலைய அதிகாரிகள் விமானத்தில் தாய்ப்பால் எடுத்துச் செல்ல ஜெசிகாவை அனுமதிக்கவில்லை. பால் முழுவதையும் கீழே கொட்டி அழிக்க கட்டாயப்படுத்தினர். அதை தொடர்ந்து அவர் தான் எடுத்து வந்த தாய்ப் பாலை கீழே கொட்டினார். அதன் பிறகே விமானப் பயணத்துக்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.

பேஷ்புக் இணைய தளத்தில் இது குறித்து எழுயுள்ளார், அதில் தாய்ப்பாலை கீழே கொட்டி தான் அவமானப்படுத்தப்பட்டது  அதனால் எனது மகனின் 2 வார உணவு வீணாகி விட்டது என குறிப்பிட்டார்.

அதற்கு விமான அதிகாரிகள் மறுத்துள்ளனர். பாதுகாப்பு கருதி விமானத்தில் திரவப் பொருள் எடுத்து செல்ல அனுமதிப்பதில்லை. தாய்ப்பால் போன்ற அத்தியாவசியமான திரவ உணவு வகைகள் 100 மிலி மட்டுமே எடுத்துச் செல்ல  அனுமதிக்கப்படுவர். அதுவும் ஒரு தாய் தன்னுடன் குழந்தையை அழைத்து செல்லும் பட்சத்தில் அவற்றை எடுத்து செல்ல முடியும் என்றனர்.