ஏலியன் சிக்னலின் 39 ஆண்டு கால மர்மம், !?
1977-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஈடி (ET)எனப்படும் எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல் (Extra Terrestrial) வானியலாளர் ஜெர்ரி ஏமன் (Jerry Ehman), வேற்று கிரக நாகரீகத்தில் இருந்து ஏதேனும் சிக்னல் கிடைக்குமா என்று 'பிக் இயர் தொலைநோக்கி' ஒன்றின் மூலம் வானத்தை அலசிக் கொண்டிருந்தார். சரியாக இரவு 10.16 மணிக்கு, அவருக்கு மிகவும் விச்திரமான சிக்னல் ஒன்று கிடைத்தது - அது 'தான் 'வாவ்' சிக்னல் (Wow Signal)..!
எண்ணற்ற அறிவியல் புனைக்கதைகளை கொண்ட விடயங்களில் 'வாவ்' சிக்னலும் ஒன்று. ஆகினும் கூட, இது தான் வேற்று கிரகவாசிகள் சார்ந்த ஆதாரங்களில் மிகவும் பலமான ஒன்றாகும். இந்த பிரபஞ்சத்தில் நாம் 'தனியாக இல்லை' என்பதை நாம் நம்பியே ஆக வேண்டும் என்று உணர்த்தும் வாவ் சிக்னல் உண்மையில் என்ன சொல்ல வருகிறது.?! என்ன அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளது..!? - என்பதை யாராலும் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை..!