நடிகைகள் பற்றிய ரசிகர்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்!
கதாநாயகிகள் என்றாலே பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்ற கண்ணோட்டம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இது மாற வேண்டும், என்று நடிகை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் சமந்தா, முன்பு போல அதிக படங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்க்க ஆரம்பித்துள்ளார். பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் ஒப்புக் கொள்கிறார்.