Breaking News

மே 2 முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் ???

எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம், VAT 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதால் நுகர்வோர் மாத்திரமன்றி, சிறிய மற்றும் மத்தியதர வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாவர் என, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் சுகாதாரச் சேவைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், தகவல் தொடர்புப் பிரிவுகள், இவ் வரியிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென,  நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கூறினார். 

இது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமது அமைப்பினால் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இவ்வதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனவும் தொலைபேசி, நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.