எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெளிநாடுகளில் கடன் கேட்கும் சவுதி !
எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா
உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது சவுதி அரேபியா. அங்கு ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் கொட்டி வந்தது. எனவே இந்த நாடு நல்ல வளத்துடன் இருந்து வந்தது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் சவுதி அரேபியாவில் வருமானம் மிகக்குறைந்து விட்டது. இதனால் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை.
எனவே வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதிஅரேபியா தள்ளப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கடன் வாங்கினார்கள். இப்போது மறுபடியும் வெளிநாடுகளில் கடன் கேட்டுள்ளனர்.
பல்வேறு சர்வதேச வங்கிகளில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடனை வாங்கினால் தான் நாட்டை நடத்திச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.



