பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையாளிகள் தராதரம் பாராது கைது செய்யப்படுவர்
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் எவ்வித தராதரமும் பார்க்காது கைது செய்யப்படுவர்கள் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஊறுதியளித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி கொலையுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் இந்நிலையில் கைது நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.