இலங்கை மீதான தடை நீக்கம் ?
விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்குவது பற்றிய முக்கிய கலந்துரையாடல் ஒன்று இந்த மாதம் 18ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தநிலையில் சர்வதேச கடற்றொழில் சட்டத்திட்டங்கள் முறையாக பின்பற்றப்படாத நிலையில் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு இந்த தடை விதிக்கப்பட்டு, 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்தது.
இத் தடையை நீக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதன் நிமித்தம் விசேட குழு ஒன்று ப்ரசல்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளுடன், எதிர்வரும் 18ம் திகதி முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.