Breaking News

அதிகம் விரும்பப்படும் ஹீரோயின் யார்?

சென்னை: 2015 ம் ஆண்டில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தென்னிந்தியாவின் விருப்பதிற்குரிய நாயகி யார்? என்ற கருத்துக்கணிப்பொன்றை சமீபத்தில் நடத்தியது.

மடோனா செபாஸ்டின் தொடங்கி திரிஷா, அனுஷ்கா வரை முன்னணி தென்னிந்திய நடிகைகள் அனைவரின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதில் அனைவரும் எதிர்பார்த்தவாறு நடிகை நயன்தாரா முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். 2013 ம் ஆண்டில் 9 வது இடத்தையும், 2014 ம் ஆண்டில் 7 வது இடத்தையும் பிடித்த நயன்தாரா கடந்த ஆண்டில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார். 2 வது இடத்தை ஸ்ருதி ஹாசனும், 3 வது இடத்தை எமி ஜாக்சனும், 4 வது 5 வது இடங்களை அனுஷ்கா, தமன்னாவும் கைப்பற்றியுள்ளனர்.