தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகையில் நீச்சலடிப்பதற்கு தினமும் 15,000 லிட்டர் நீரை வீணடிப்பது?: டோணி மீது புகார்
ஜார்க்கண்டில் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் டோணி வீட்டு நீச்சல் குளத்திற்கு தினமும் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக அவரது பக்கத்துவீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது கிரிக்கெட் வீரர் டோணியின் வீடு. ஜார்க்கண்ட்டில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடாக இருக்கையில் டோணி வீட்டில் தினமும் 15 ஆயிரம் லிட்டம் நீர் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இது குறித்து டோணி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜு சர்மா கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடாக உள்ள நிலையில் டோணி வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் 15 ஆயிரம் லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. அந்த நீரை தினமும் மாற்றுகிறார்கள். எங்களிடம் நான்கு போர்வெல்கள் இருந்தும் அவை வேலை செய்யவில்லை. ஆனால் டோணி வீட்டில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் நீரை வீணடிக்கிறார்கள். அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். டோணியின் ஆலோசகர் கூறுகையில், டோணி ஊரில் இருந்தால் மட்டும் தான் நீச்சல் குளத்தில் நீர் நிறப்பப்படும். உள்ளூர் மக்கள் கூறுவது போன்று தினமும் நீர் மாற்றப்படுவது இல்லை என்றார்.