Breaking News

5வகையான மாவட்டங்களுக்கு 4 வகையான அனர்த்த அபாயம் !

தற்போது நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடருமையின், ஐந்து மாவட்டங்களின் 26 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, நான்கு வகையான அனர்த்தங்கள் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இவற்றில் கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களே, இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியகூறுகள் அதிகளவில் தென்படுகின்றதாகவும்,  மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானத்துடன்  இருக்குமாறு அந்நிலையம் அறிவித்துள்ளது.