Breaking News

மீண்டும் அழகிய தமிழ் மகனாக மாறும் விஜய்?

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவருக்கு இரட்டை வேடங்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தெறியைத் தொடர்ந்து விஜய் தற்போது பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், காமெடி வேடத்தில் சதீஷும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் இப்படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேடத்தில் திருநெல்வேலி பாஷை பேசுபவராகவும், மற்றொரு வேடத்தில் மொட்டையடித்த தோற்றத்துடனும் விஜய் நடித்து வருகிறாராம்.