Breaking News

அழுகின்ற குழந்தைகளை அரை நிமிடத்தில் சிரிக்கவைக்க கூடியவர் ஒபாமா !

ஜப்பான் நாட்டில் அணுகுண்டு வீச்சால் தரைமட்டமான ஹிரோஷிமா நகருக்கு செல்லும் வழியில் இவாகுனி நகரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கு ஓயாமல் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தையை தூக்கி, அரை நிமிடத்துக்குள் சமாதானப்படுத்தினார்.

சமீபத்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹிரோஷிமா நகருக்கு சென்றார். சென்ட்டோபாத் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைதி பூங்காவில் உள்ள அணுகுண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவிடத்துக்கு சென்ற அவர், அங்குள்ள நினைவுச் சின்னத்தின்மீது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என ஒபாமா கூறினார்.

ஹிரோஷிமா நகருக்கு செல்லும் வழியில் ஜப்பான் நாட்டில் அமெரிக்க விமானப்படைத்தளம் அமைந்துள்ள இவாகுனி நகருக்கு சென்ற ஒபாமா, அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஒபாமாவை காண நின்றிருந்த கூட்டத்தில் ஒரு குழந்தை ஓயாமல் அழுதபடி இருந்தது.


உடனடியாக, தாயாரின் கையில் இருந்து அந்த குழந்தையை வாங்கிய ஒபாமா, ஏதோகூறி அரை நிமிடத்துக்குள் சமாதானப்படுத்தி, தாயாரிடம் திருப்பி ஒப்படைத்தார். 




சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் தனது மனைவி மிச்சேலின் கையில் ஓயாமல் அழுதபடி இருந்த ஒரு குழந்தையையும் ஒபாமா ஏதோ மாயம்செய்து சில வினாடிகளுக்குள் அமைதிப்படுத்தியதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.