Breaking News

சீமெந்தின் அதிகரிக்கபட்ட விலையானது புதிய கையிருப்புக்கு மாத்திரமே !

சீமெந்தின் அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே அதாவது. 01.06.2016 திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் அதிகரிக்கப்பட்ட விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களிடம் கேட்டுள்ளது. இதன்படி 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இதுவரை 870 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.