Breaking News

தேசிய சுற்றாடல் வாரம்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண உள்ளூராட்சி சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை விழா இன்று காலை திருகோணமலை உவர்மலை சுற்றாடல் பூங்காவில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் திருமதி  ஆரியபதிகலபதி ஆகியோர் கலந்து கொண்டதுடன் அமைச்சின் அதிகாரிகள், உள்ளூராட்சி ஆணையாளர் திரு சலீம், மற்றும் நகரசபை செயலாளர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.