Breaking News

கபாலி இசை வெளியீடு ஜுன் 9 அல்ல... ஜுன் 12 , ரசிகர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதில்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி ஜுலை 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக ஜுன் 9 -ஆம் தேதி பாடல்களை வெளியிட திட்டமிட்டனர். அதன் காரணமாக ஜுன் 9 வெளியாவதாக இருந்த சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டையும் தள்ளி வைத்தனர். தற்போது கபாலியின் பாடல்கள் வெளியீட்டை ஜுலை 12 -ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். 

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போல் ஒரு நிகழ்ச்சிக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கும் ரஜினி சென்னை வந்ததும் இந்த நிகழ்ச்சி குறித்து முடிவு செய்யப்படும்.