Breaking News

கபாலியை கலாய்கும் 'அட்ரா மச்சான் விசிலு' அதேதிகதியில்

முக்கியமாக, ரஜினியை விமர்சிக்கும், அட்ரா மச்சான் விசிலு. பவர் ஸ்டார் சீனிவாசன், சிவா நடிக்கும் இந்தப் படத்தில் ரஜினி போன்ற ஒரு மெகா ஸ்டாராக சீனிவாசன் நடித்துள்ளார். அவரது வெறிபிடித்த ரசிகராக சிவா. நெருங்கி பழகும் போதுதான் சீனிவாசனின் உண்மை முகம் சிவாவுக்கு தெரிய வருகிறது. அது என்ன உண்மை முகம்? சிவா அடுத்து என்ன செய்தார்? இவைதான் அட்ரா மச்சான் விசிலு படத்தின் சுவாரஸியங்கள்.

திரைவண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படம் பிரேமுக்கு பிரேம் ரஜினியை கிண்டலடிக்கிறது என்கிறார்கள். திரைவண்ணனிடம் கேட்டால், ரஜினி இமயமலை நாங்க வெறும் பறங்கிமலை என்று எதுகை மோனையில் பேசுகிறார். இந்த இமயமலை பறங்கிமலை உதாரணத்தில்கூட எதுவோ புகைந்த வாசனை வருதே பாஸ்.