இலங்கயில் இன்னும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் கருத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டில் இன்மனும் சித்திரவதைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைனால், இலங்கை தொடர்பிலான வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன்பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.