சிங்கள மாணவர்களின் வருக்கையின்மைக்கு பொலிசாரினால் எதுவும் செய்ய முடியாது!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியாக கற்றல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமை குறித்து பொலிசாரினால் எதுவும் செய்யமுடியாது என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துளர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவகுழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளநிலையில் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் எவரும் இதுவரை தமது வகுப்புகளுக்கு சமூகமளிக்காமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



