பசிலுக்கும் விளக்கமறியல்
நேற்றயதினம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்ற போது கைதான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் திவிநெகும திட்டத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



