கமலின் இடத்திற்கென மூன்று நடிகர்கள்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கிறார். ‘நான் ஈ’, ‘புலி’, ‘பாகுபலி’ ஆகிய படங்களுக்கு நான்காவதாக இவர் நடிக்கும் நேரடி தமிழ் படம் இது. இப்படத்தின் கதாநாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்து முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற ஜுலை 20-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். கமல் இந்த ஆடியோ விழாவில் பங்கேற்று படத்தின் பாடல்களை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு கமலுக்கு காலில் அடிபட்டதால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவரால் இந்த ஆடியோ விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது இடத்தை நிரப்பும் விதமாக இந்த ஆடியோ விழாவில் மூன்று முக்கியமான நடிகர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
அதன்படி, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த ஆடியோ விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். விஜய் சேதுபதி படத்தின் படத்தின் ஆடியோவை வெளியிட, தனுஷ் முன்னிலையில் சிவகார்த்திகேயன் அதை பெற்றுக்கொள்ளவிருக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது.



