மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மாநகர சபையினால் மாபெரும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன
(லியோன்)
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மாபெரும் சிரமதான பணிகள் 15.07.2016 இன்று மேற்கொள்ளப்பட்டன .
இன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணியில் மாநகர சபை அதிகாரிகள் ,மாநகர சபை ஊழியர்கள் , மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இவர்களுடன் இனைந்து மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களும் இடம்பெற்ற சிரமதான பணிகளின் ஈடுபட்டனர் .












