அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல்
(லியோன்)
19வது அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றிய இணையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இணையம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது .
அரசியலமைப்புக்கான திருத்தங்களோடு மேம்படுத்தப்பட்ட பிரஜைகளின் சுதந்திரம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது .
அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தரிக் குழுவானது2016 ஜனவரி 05ஆம் திகதி முதல் முறையாக ஒன்று கூடி குறிகிய காலத்திற்குள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பொது மக்களுக்கான அமர்வுகளை நடத்தி பொதுமக்களின் கருத்தாலோசனைகளை பெற்றிருந்தது .
இதன் போது இருபது அடிப்படை விடயங்களில் பொதுமக்களின் கருத்தாலோசனைகள் பெறப்பட்டது .
இதன் கீழ் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பகுப்பாய்வு செய்து பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையானது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரிக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .
இக்குழுவின் அறிக்கை 310 பக்கம் வரை காணப்படுகின்றது , இந்த பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றிய இணையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இணையம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது .










