Breaking News

மட்டு - ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு  ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்தில் கிழக்குமாகான சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள  இரண்டு மாடி கட்டிட ஆய்வு கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  20.07.2016  இன்று காலை பாடசாலை அதிபர் யோகானந்த ராஜா தலைமையில் நடைபெற்றது .

கிழக்குமாகான சபையால் PSDG வேலைத்திட்டத்தின் கீழ்  5.5 மில்லியன் ரூபா  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த இரண்டு மாடி கட்டிட ஆய்வு கூடம் மற்றும் வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படவுள்ளது .


இன்று நடைபெற்ற இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கிழக்குமாகான சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துறைரெட்ணம் , மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் , பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .