Breaking News

இரு சகோதரர்கட்கு மரணதண்டனை!

கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. மாத்தறை மேல் நீதிமன்றமே  இத்தீர்ப்பை இன்று வழங்கி உள்ளது. இச்சகோதரர்கள் 09.10.2006ஆம் ஆண்டு அகுரஸ்ஸவின் வல்பிட பகுதியில் 50 வயதான ஒருவரை கொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்க பட்டமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதான இவ்விரண்டு சகோதரர்களுக்கும் மரணதண்டனை வழங்க்கப்பட்டுள்ளது.