Breaking News

மன்னாரில் புனித கப்பலேந்தி மாதா தேவாலயத்தின் மீது கல்வீச்சு தாக்குதலினால் சிறுமி காயம்

நேற்றயதினம் மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி இடம்பெற்றபோது  இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டதால் ஆலயத்தின் ஓடு உடைந்து ஆலயத்தினுள் விழுந்ததில் பிராத்தனையில் கலந்துகொண்டிருந்த சிறுமிக்கு காயமேற்ட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இச்சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இவ்வாலயத்தின் மீது, இவ்வாறான தாக்குதல்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் நடாத்தப்பட்ட போதும்  பலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.